நியூசிலாந்தில் அடுத்த தலைமுறையினருக்கு சிகரட் விற்பனை செய்ய முழுமையாக தடை!
நியூசிலாந்தில் சிகரட்டை கொள்வனவு செய்பவர்களுக்கு அரசாங்கம் புதிய சட்டத்தை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த நபர்களுக்கு சிகரட் விற்பனை செய்வதற்கு நியூசிலாந்து தடைவிதித்துள்ளது.
இந்த புதிய சட்டத்திற்கு அமைய 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த எவருக்கும் தமது வாழ்நாளில் நியூசிலாந்தில் சிகரட்டை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காது. இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
படிப்படியாக புகைப் பழக்கத்தில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் காரணமாக ஏற்படும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட சீர்கேடுகள் உட்பட சில விடயங்களை அடிப்படையாக கொண்டு நியூசிலாந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்துடன் நியூலாந்து தனது நாட்டை படிப்படியாக புகைப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் புகைத்தலை 5 வீதமாக குறைக்க நியூசிலாந்து உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.