மாணவர்களின் சமூக ஊடக பயன்பாடு குறித்து பாடசாலைகளுக்கு பறந்த சுற்றறிக்கை
பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்புக்கு சமூக ஊடக சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி.ஜெயசுந்தர இது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அதிகாரிகள் உட்பட அனைத்து அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுபட்ட கல்வி வாய்ப்புகளை மறைப்பதற்காக வாட்ஸ்அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக சாதனங்களின் பயன்பாடு தொடங்கப்பட்டது.
பாதகமான விளைவு
இந்த நிலையில், மாணவர்கள் இன்னும் குறித்த சமூக ஊடக சாதனங்களை பயன்படுத்தி வருவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து தற்போது அமைச்சகத்திற்கு தகவல் பதிவாகி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து ஆசிரியர்களுக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தும் போது குறித்த சுற்றிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |