மீண்டும் பழிக்கு பழி வாங்கிய ரஷ்யா: உக்ரைனின் நகரமொன்றை சுற்றி வளைத்து தாக்குதல்
உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யாவின் ட்ரோன் படைகளால் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ரஷ்யாவின் பெல்கோரோட் நகரம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாகவும் 108 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் 37 தொகுப்பு குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பழி வாங்கும் வகையிலேயே ரஷ்யா உக்ரைனின் கார்கிவ் நகரத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை
இந்நிலையில், குறித்த தாக்குதலில் இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரஷ்யா, உக்ரைனின் குடியிருப்பு வளாகங்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Lesia Vasylenko குற்றஞ்சாட்டியுள்ளார்.
போரின் முடிவு
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தங்களுக்கு ஆயுதம் வழங்குபவர்கள், இந்த போர் முடிவுக்கு வரும் வரையில் ஆயுத உதவிகள் வழங்குவோம் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், ரஷ்யாவின் பெல்கோரோட் நகரத்தின் மீதான தாக்குதலுக்கு தாம் பழிவாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |