அமைச்சர்களுக்கு இடையில் மோதல்: ஆளுங்கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில்..
Parliament of Sri Lanka
SLPP
Sri Lankan Peoples
By Dhilak
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மோதல் நிலைமையானது, இன்று(03) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைப்புக் குழு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச (Gunathilaka Rajapaksha) ஆகியோருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அமைச்சர்
இதன்படி, மோதலினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவும் தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்