கிழக்கு பல்கலையில் மாணவர்களுக்கிடையே வலுத்த மோதல்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University Sri Lanka) மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கிடையே மோதல்
இந்தநிலையில், வர்த்தகப் பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் நான்கு மாணவர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து ஒரு மாணவன் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து, காயமடைந்த மாணவன் ஏறாசவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்பு, காயமடைந்த மாணவன் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாடளித்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்