மஸ்கெலியாவில் இழுத்து மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்!
Corona
SriLanka
Maskelia
By Chanakyan
சுகாதார விதிமுறைகளை பேணாது மஸ்கெலியா நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளினால்இன்று மேற்கொண்டு சோதனை நடவடிக்கையின் போதே ஐந்து வர்த்தக நிலையகள் தற்காலிகமாக 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுள்ளதுடன் கடந்த ஒருவாரப்பகுதியில் மூன்று கொரோனா தொற்று மரணம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து நகரில் பொது சுகாதார அதிகாரிகளினால் சகல வர்த்தக நிலையங்களும் சோதனைக்குற்படுத்தப்பட்டதுடன் சுகாதார விதிமுறையை பேணாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி