கிளப் வசந்த கொலை விவகாரம் : மேலும் இருவர் கைது
அத்துருகிரியவில் (Athurugiriya) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பேருந்தின் சாரதியும் மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆம் திகதி அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலையத்தை திறக்கச் சென்ற கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவும் மற்றுமொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் பிரபல பாடகி கே. சுஜீவா மற்றும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேற்கு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று (23) மாலை அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல (Battaramulla) பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனவும், மற்றையவர் துப்பாகிதாரிகளை அழைத்து வந்த கார் ஓட்டுநருக்கு உதவியவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் சந்தேகநபர் வட்ஸ்அப் ஊடாக வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரும் அதுருகிரிய காவல்துறையினரும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |