கிளப் வசந்த படுகொலை: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் நீதிமன்றில்..
கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 08 ஆம் திகதி அத்துருகிரியவில் வைத்து கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தீவிர விசாரணை
அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, பாடகியொருவர் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் கிளப் வசந்தவின் மனைவியும் அடங்குவார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொண்ட காவல்துறையினர், 7 சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |