கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை கைது
Sri Lanka Police
Sri Lanka Airport
Sri Lanka Police Investigation
Crime
Colombia
By pavan
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தென்னமெரிக்கா நாடான கொலம்பியாவில் இருந்து QR 662 என்ற விமானத்தில் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கொக்கைன் போதைப்பொருளை தொலைநகல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் காகித உருளைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அதேவேளை, குறித்த போதைப்பொருளின் மொத்த பெறுமதி 245 மில்லியன் ரூபா எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட கொலம்பிய நாட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி