மருத்துவ பீட மாணவர் மீதான தாக்குதல் - மற்றுமொருவர் இராஜினாமா?
ராகம மருத்துவ பீட மாணவர் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து கீர்த்தி வீரசிங்க (Keerthi Weerasinghe) இராஜினாமா செய்துள்ளார்.
அரசதலைவர் செயலகத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவித்தலுக்கு அமையவே தலைவரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட குழுவினர், தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்தி ராகம மருத்துவ பீட விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமைக்கு பொறுப்பேற்று தலைவரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்தப் பதவி விலகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராகம மருத்துவ பீட மாணவர் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்