தோண்டப்படும் ஜனநாயகத்தின் சவப்பெட்டி : ரணிலின் கைது குறித்து மைத்திரி
Colombo
Maithripala Sirisena
Ranil Wickremesinghe Arrested
By Sumithiran
ஜனநாயக சமூகத்தின் பண்புகள் படிப்படியாக மறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (24) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
படிப்படியாக மறைந்து வரும் ஜனநாயகத்தின் பண்புகள்
"ஜனநாயக சமூகத்தின் பண்புகள் படிப்படியாக மறைந்து வருவதை நாம் காண முடிகிறது. ஜனநாயகத்தின் சவப்பெட்டி தோண்டப்படுவதை நாம் காண்கிறோம்."
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் . ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஓரணியில் செயற்படுவோம் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
