ரணிலை பாம்புடன் ஒப்பிட்ட அரசியல் கட்சி: அரசாங்கத்திற்கு பாராட்டு!
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Dilakshan
“பாம்பை காயப்படுத்தி கொல்லாமல் விட்டால் அது திரும்பக் கடிக்கும்” என முன்னிலை சோசலிஸக் கட்சி தெரிவித்துள்ளது.
ரணிலின் கைது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரசாங்கம், தூதரக வட்டாரங்களின் அழுத்தங்களையும் மீறியும், விக்ரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அதனையும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டலந்த சித்திரவதைக் கூடம்
இதன்படி, தமது கட்சி, அரசாங்கத்தின் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான மேலதிக நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் என்றும் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.
மேலும், ரணில் ஒரு ஆபத்தான நபர் எனவும் அவரது கடந்த காலம் பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளால் கறைபட்டுள்ளது" என்றும் நாகமுவா சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 10 மணி நேரம் முன்
