விடுதலைப் புலிகளை வீழ்த்துவதில் முன்முரமாக இருந்த ரணில்!
விடுதலைப்புலிகளை நெருக்கடிக்கு தள்ளுவதில் பின்னால் இருந்த மிக முக்கியமான நபர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என பேராசிரியர் கணேசலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த கைது ஊழல் சார்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது இருப்பினும், இலங்கையின் தேசியத்தோடு மற்றும் இலங்கையின் பெருபான்மை மக்களுக்காக முழுவதுமாக உழைத்த ஒருவரின் கைதாகத்தான் இதை நான் கருதுவேன்.
இலங்கையில் இடம்பெற்ற அனைத்து அதாவது, அது ஆயுதப்போராட்டமாக இருக்கலாம் இனவாத தளத்தில் இருந்த அரசியல் போராட்டமாக இருக்கலாம் அனைத்திலும் சிங்கள தேசியத்தின் தனித்துவத்தை பேணுவதற்காக உழைத்த முக்கியமான ஒரு நபர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.
பேச்சுவார்த்தை காலத்தில் உரையாடல்களை உலகத்திற்கு கொண்டு செல்வதிலும் மற்றும் விடுதலை புலிகள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதற்கும் முக்கிய பின்னணியில் இருந்தவர் ரணிலாவார்.
இந்தநிலையில், குற்றப்பபுலாய்வு திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கூட இலங்கையின் தேசியத்திற்காக தனது நடவடிக்கை இருக்கும் என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.
இதனடிப்படையில் அவரின் கைது என்பது தனித்து ஊழல் சார்ந்து என்பதை மட்டும் கொண்டு மட்டுப்படுத்தப்படுகின்றதா என்பது குழப்பமாகவுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரணிலின் கைது, தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, சிக்கபோகும் ஏனைய ஊழல்வாதிகள் மற்றும் பல தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 11 மணி நேரம் முன்
