நள்ளிரவில் கோர விபத்து: மூவர் பலி ஒருவர் படுகாயம்
கொழும்பு - குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது, நேற்று(5) இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் எதிர்த்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் இறந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
