கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வர்த்தகர் கைது
Bandaranaike International Airport
Gold smuggling
By Sumithiran
சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தைநாட்டில் (43 மில்லியன்) கடத்த முற்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
சந்தேகநபர் வியாழக்கிழமை (18) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் விமானமான EK-650 இல் வந்திறங்கியுள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம்
பயணிகளின் லக்கேஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
35 வயதுடைய வர்த்தகர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர் என்றும் கொழும்பில் வசிப்பவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறையான விசாரணைகளைத் தொடர்ந்து, கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தொழிலதிபருக்கு ரூ. 1.2 மில்லியன் என்று சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
மரண அறிவித்தல்