துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய அனைத்து காவல்துறையினரையும் உடன் கைது செய்க! கொழும்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Sri Lankan protests
Supreme Court of Sri Lanka
Rambukkana Shooting
Rambukkana Protest
Sri Lanka Police Investigation
By S P Thas
றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து காவல்துறையினரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி