தடைபட்ட கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி : மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!
கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி, தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.
இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அபாயம்
அத்துடன், தற்போது மண்மேடு சரிந்த வீழ்ந்துள்ள இடத்தில் மேலும் சில மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் உயிரிழந்த சிறுவன் : விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ரணில் பணிப்புரை
இதனால், கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் சற்று தாமதமடையலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் அறிவுறுத்தல்
இதற்கமைய, கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் லக்ஸபான நோர்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் நாவலப்பிட்டி திம்புலபதன தலவாக்கலை வீதியை பயன்படுத்த முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, தெனியாய இரத்தினபுரி வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்