அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையிலான பகுதியில் இரு கனரக வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று (26) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்தில் உயிரிழந்தவர், ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய கனரக சாரதியாவார்.
விபத்தில் ஒருவர் பலி
இந்த விபத்தானது, ரத்கம பிரதேசத்தில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்வனவு செய்யவதற்காக பயணித்த கனரக வாகனம் ஒன்று ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து குருணாகல் பிரதேசத்திற்கு சீமெந்து ஏற்றி கொழும்பு பிரதேசத்தை நோக்கி பயணித்த மற்றுமொரு கனரக வாகனத்துடன் மோதியதில் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
22 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        