கொழும்பில் 300இற்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 300 இற்கும் மேற்பட்ட மரங்கள் மக்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மரங்களை உடனடியாக அகற்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலிலே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
முறையான அமைப்பை
இதனை தொடர்ந்து கொழும்பு பகுதிகளில் மிகவும் பாதுகாப்பான பொருத்தமான மரங்களை நடுவதை உறுதி செய்வதற்கான முறையான அமைப்பைத் தயாரிக்குமாறு அது சம்பந்தமான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஏற்பட்ட பாரிய விபத்தினை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்