இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்
மிக விரைவில் காஸா பகுதியில் இருந்து இனி எவரும் தாக்குதல் முன்னெடுக்காத வகையில் சூழலை உருவாக்குவோம் என இஸ்ரேல் ராணுவ வீரர் சாவால் விடுத்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை முதல் இஸ்ரேலுக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் சேர்த்து 4000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பு மொத்தமாக அழிக்கப்படும் வரையில் போர் தொடரும் என்றே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேலின் அறிக்கை
அத்தோடு, இஸ்ரேல் உருவாகி 75 ஆண்டுகளுக்கு பிறகு, எதிர்கொள்ளும் மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் காஸா மீது தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகின்ற நிலையில் காசா எல்லையில் டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளதுடன், 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட இஸ்ரேல், சனிக்கிழமையிலிருந்து மொத்தம் 4,000 டன் வெடிபொருட்களைக் கொண்ட சுமார் 6,000 வெடிகுண்டுகளை காஸா மீது வீசித் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, உலக நாடுகள் ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கியது போல, ஹமாஸ் படையினரை தாம் ஒடுக்க இருப்பதாகவும் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.