கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள 13 ஏக்கர் தொடர்பில் வெடித்தது மற்றுமொரு சர்ச்சை
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள 13 ஏக்கர் நிலத்தை “துறைமுக சேவை வழங்கல் மையம்” அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கும் அரசின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் (ACPEU) கோரியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவில் ஒரு சிறந்த சேவை மையமாக மாற்றுவதற்கான காரணத்தை கூறி, 13 ஏக்கர் நிலத்தை CICT என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக, அரச ஊழியர்களின் வேலை இழப்பு மற்றும் துறைமுகத்தில் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக துறைமுக பொது ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த காரணிகளுக்கு மேலதிகமாக, துறைமுக அதிகார சபையில் கடுமையான சம்பள ஒழுங்கின்மை பிரச்சினை உள்ளது.
மேலும், இந்த பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் தொழிற்சங்கம் கூறுகிறது.