கொழும்பு துறைமுகநகரம் ஏன் அவசியம் - சீனாவில் விளக்கமளித்த அமைச்சர்
இலங்கை பிராந்திய நிதி மற்றும் வர்த்தகதளமாக மாறவேண்டும் என்றால் அதற்கு கொழும்பு துறைமுகநகரம் மிகவும் அவசியம் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.
சீனாவில் இடம்பெற்ற சைனாசவுத்ஏசியன் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது சூழல்சவால்களிற்கு கூட்டாக தீர்வு காண்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்ய முடியும், அடுத்துவரும் தலைமுறைகளுக்கு எங்கள் சமுத்திரங்களை பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2012 முதல் இலங்கையின் முக்கியமான முதலீட்டு சகாவாக சீனா மாறியுள்ளது. அந்தவகையில் 2005 முதல் 22 வரை 3.334 மில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீடுகள்

இதில் சில பாரிய அபிவிருத்தி திட்டங்கள் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை ஆதரிக்கும் நோக்கத்தை கொண்டவை எனவும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை தொடர்ந்தும் முன்நகர்த்துவதற்கு சீனாவின் முதலீடுகள் மிகவும் அவசியமானவை.
அந்தவகையில், இலங்கை சமீபத்தைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இலங்கையில் மேலும் முதலீடு செய்யுமாறு சீனாவை அழைக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.