323 கொள்கலன் விவகாரம்! முக்கிய சாட்சியங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்
கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முக்கிய சாட்சியங்களை அழைப்பதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட குழு இன்று (22.04.2026) பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடவுள்ள நிலையில் இது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் துறைமுக விவகார அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்க மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளரையும் அக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்குமாறும் கோரிகை விடுத்துள்ளனர்.
ஹர்ஷன நாணயக்கார
சம்பந்தப்பட்ட குழுவின் பிரதிநிதிகளான அஜித் பி. பெரேரா, தயாசிரி ஜயசேகர, முஜீபுர் ரஹுமன் மற்றும் டி.வி. சானக ஆகியோர் கையொப்பமிட்ட சம்பந்தப்பட்ட கடிதம், அக்குழுவின் தலைவரும், நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானம் தொடர்பான சாட்சிகளை வரவழைப்பது குறித்து சம்பந்தப்பட்ட குழு இன்று (22.04.2026) பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடி முடிவு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |