ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்குமாறு காவல்துறை கோரிக்கை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Police
Go Home Gota
Colombo
Sri Lankan protests
Sri Lanka Magistrate Court
By Kanna
கொழும்பு - கோட்டை, புறக்கோட்டை முதலான பகுதிகளில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்குமாறு காவல்துறை முன்வைத்த கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டம்
நாளை மற்றும் நாளை மறுதினம் அரசாங்கத்திற்கு எதிராக தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இதனால், கொழும்பு கோட்டை காவல்துறையால், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீதவானின் உத்தரவு
குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா அதனை நிராகரித்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றால், அது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளமையால், குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்