அநுர அரசில் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளவர் யார் தெரியுமா..!
ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva), தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்குள் தற்போது, ஒரு முக்கிய நபராக மாறிவிட்டதைக் காணலாம்.
இந்த நாட்டிற்கு வரும் சர்வதேசத் தலைவர்களும் அதிகாரிகளும், அரசாங்க அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமையகத்திற்குச் சென்று ரில்வினைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தெடார்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேடிச் சென்று சந்திப்பு
சமீபத்திய நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் சந்தித்து ரில்வினைச் சந்திக்க நடவடிக்கை எடுத்தார். இதேபோல், கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ எம்பெக்கி, ஜனாதிபதியையும் சந்தித்து ரில்வினைச் சந்தித்தார்.
யாரும் எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க நடவடிக்கை எடுக்கவில்லை
ஆனால் இங்குள்ள சிறப்பு என்னவென்றால், இவர்களில் யாரும் எதிர்க்கட்சித் தலைவரை தனியாகச் சந்திக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுவாக, ஒரு நாட்டுத் தலைவர் அல்லது வேறொரு நாட்டிலிருந்து உயர்மட்டக் குழு இலங்கைக்குச் சென்றால், ஜனாதிபதி மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளையும் நெறிமுறைகளின்படி சந்திப்பது ஒரு பொதுவான மரபாகும்.
இருப்பினும், சமீபத்திய நாட்களில் இதுபோன்ற ஒரு விஷயம் காணப்படவில்லை. இப்போது ரில்வின் எதிர்க்கட்சித் தலைவர்களை விட சக்திவாய்ந்தவராக மாறிவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
