கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்..! வசந்த முதலிகே கைது
மூன்றாம் இணைப்பு
அனைத்து பல்கலைகழக மாணவ முதல்வர் வசந்த முதலிகே கைது செய்யப்படுள்ளார்.
பாலியகொட டி.சி.டி.பி பிரிவினரால் போராட்ட களத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல பல்கலைகழக மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
3.50PM
அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுதுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டைப் பகுதியை நோக்கி முன்னேறி சென்ற அனைத்து பல்கலைகழக மாணவர்கள் மீது கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து கண்ணீர் புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
3.45pm
ஆர்ப்பாட்டம்
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ரணில் அரசாங்கத்துக்கு எதிராகவும், நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளுக்கு உடனடி தீர்வு கோரியும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல பகுதிகளில் இருந்து வருகை தனித்துள்ள மாணவர்கள் மற்றும் பௌத்த தேரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவுளித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மேலும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.


இந்த போராட்டத்திற்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் வாசித்து காட்டியபோதிலும் அதனை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்