முற்றுகையிட திட்டம்: பலப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் பாதுகாப்பு -10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் குவிப்பு!

Sri Lanka Army Sri Lanka Police Go Home Gota Colombo SL Protest
By Kanna Jul 08, 2022 08:23 AM GMT
Report

நாளை உக்கிரமடையவுள்ள போராட்டம் 

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுகந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று அரசியல் கட்சிகளும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளைய போராட்டங்களில் கலந்துக்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச தலைவர் மாளிகையை சுற்றி நிர்மாணிக்கப்படும் இரும்பு வேலிகள்

முற்றுகையிட திட்டம்: பலப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் பாதுகாப்பு -10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் குவிப்பு! | Colombo Protest Tommorow Sri Lanka Crisis 2022

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிடலாம் என பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெவிக்கப்படுகிறது.

இதனால், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அரச தலைவர் மாளிகையை சுற்றி இரும்பு வேலிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

குவிக்கப்பட்டுள்ள படையினர்  

முற்றுகையிட திட்டம்: பலப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் பாதுகாப்பு -10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் குவிப்பு! | Colombo Protest Tommorow Sri Lanka Crisis 2022

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அரச தரப்பினரின் பாதுகாப்புக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் ஆயிரத்து 500 பேரும் இராணுவத்தை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.

இவர்களை தவிர வடமேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் காவல் நிலையங்களில் இருந்து 3 ஆயிரம் காவல்துறையினர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு

 முற்றுகையிட திட்டம்: பலப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் பாதுகாப்பு -10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் குவிப்பு! | Colombo Protest Tommorow Sri Lanka Crisis 2022

கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அரண்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு முப்படையை சேர்ந்த இரண்டு பேர் என்ற வீதத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒரு பாதுகாப்பு அரணில் 100 காவல்துறையினர் மற்றும் 200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025