கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி

Sri Lanka Police Ministry of Education Colombo School Children
By Sathangani May 09, 2025 09:21 AM GMT
Report

புதிய இணைப்பு

கொட்டாஞ்சேனை (Kotahena) மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய போதே கொழும்பு (Colombo) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை வெளிப்படுத்தியுள்ளார்

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டபோதே, முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்று சாடினார்.

நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுமா என்றும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறினார்.


முதலாம் இணைப்பு

கொழும்பில் (Colombo) உள்ள பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிலையில், உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி | Colombo School Girl Died Education Ministry Action

குறித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் அது குறித்த விபரிப்புக்களை பெறவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம்

இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம்

 காவல்துறை விசாரணை 

அத்துடன் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி | Colombo School Girl Died Education Ministry Action

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரணிலின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

ரணிலின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

 மாணவிக்கு நீதி கோரி போராட்டம்

அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி | Colombo School Girl Died Education Ministry Action

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணையத் தயார் : செல்வம் எம்.பி பகிரங்கம்

தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணையத் தயார் : செல்வம் எம்.பி பகிரங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026