யாழ் தேவி தொடருந்து மீது தாக்குதல் : மூவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி (Chavakachcheri) பகுதியில், தொடருந்து மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (22.02.2025) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் தேவி தொடருந்து நேற்றுமுன்தினம் (21.02.2025) யாழ் நேக்கி வரும்பொழுது தொடர் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கல்வீச்சு தாக்குதல்
மேலும் தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் காணொளியாக பதிவாகியுள்ளது.
ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து யாழ். தொடருந்து நிலையத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது 15-13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் ஏற்கனவே சிறு சிறு குற்றங்ளை புரிந்தவர்கள் என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்