யாழ். கொழும்பு தொடருந்து சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கு தொடருந்து சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
வடகிற்கு அன்றைய தினத்திலிருந்து இரண்டு தொடருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான யாழ் தேவி தொடருந்தும், பெலியஅத்தவிலிருந்து அநுராதபுரம் வரையிலான ரஜரட்ட ரஜின தொடருந்தும் திங்கட்கிழழை முதல் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் பயணிக்கவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நிர்மாணப் பணிகள்
இந்த நிலையில், கடந்த நாட்களில் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதன்போது, இந்திய கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்கக்கூடிய வகையில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 22 மணி நேரம் முன்
