கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு
Colombo
Kandy
Sri Lanka
By Sindu
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி இன்று (24) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று (23) குறித் தவீதி மூடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 6.00 மணி முதல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பாறைகள் அகற்றம்
கீழ் கடுகண்ணாவ பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நேற்றிரவு முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வழக்கம்போல் குறித்த வீதியை பொதுமக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி