கொழும்பில் பதற்றம் - காவல்துறை மீது பல்கலை மாணவர்கள் கல்வீச்சு(காணொளி)
Colombo
University of Colombo
University of Moratuwa
University of Sri Jayawardenapura
SL Protest
By Dharu
கொழும்பு சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சற்று முன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகை பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த - பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பை நோக்கி வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்