முதல் நாளிலே கறுப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சியினர்
வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கட்சித் தாவல்கள்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த வருடம் முதன்முறையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடியது. அதன்படி, நாடாளுமன்றம் இன்று (09) முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்வாரம் கட்சித்தாவல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்றுவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் செல்ல தீர்க்கமான பேச்சுகளை நடத்தியுள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
அதேபோல பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிமல் லான்சாவின் கூட்டணிக்கு ஆதரவை நாடாளுமன்றில் வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றத்திற்கு சென்று, அங்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்திக்கவுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |