கழுத்தில மாலை விழும் எண்டா சவமாக் கிடக்கவும் ரெடி!! அலைந்து திரியும் கனடா பிரபலம்!!
‘கழுத்தில மாலை விழும் எண்டா சவமாக் கிடக்கவும் ரெடி..’ என்ற நிலையில் புலம்பெயர் நாடுகளில சில முந்திரிக்கொட்டைகள் மந்திரிச்சுவிட்டது மாதிரி திரியுதுகள்.
இந்த நாட்டிலதான்.. அந்த நாட்டிலதான் எண்டில்ல.. புலம்பெயர்ந்த எல்லா நாட்டிலேயும் இந்த 'ரேஞ்சில' ஒன்று இரண்டு முந்திரிக்கொட்டைகள் வெள்ளையும் சொள்ளையுமா அலைஞ்சுகொண்டு திரியுதுகள்.
இந்த ‘ரேஞ்சில’ கனடா டொரன்டோவிலேயும் ஒரு கணக்காளர் மந்திரிச்சுவிட்ட கோழி போல சுற்றிக்கொண்டு திரிந்துகொண்டிருக்கிறார்.
ஒரு அமைப்பை உருவாக்க வழியில்ல… உடனே அந்த அமைப்பின் நடுவே போய் நின்று ‘படம் காட்டி’, ‘படம் எடுத்து’ சமூகவலைத்தளங்களில வெளியிட்டுவிடுவார்.
மறுநாள் மற்றொரு அமைப்பில போய் நின்று..தான் முதல்நாள் எடுத்த படத்தக் காட்டி 'நான்தான் அங்க எல்லாம்..’ என்று வெடிவிட்டு பம்மாத்துக் காட்டி, அங்கேயும் புகைப்படத்துக்கு போஸ்’ கொடுத்து, “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ..” என்று கூறிக்கொண்டு அடுத்த கூட்டத்துக்கு போய்விடுவார்.
ஒரு குறிப்பிட்ட அமைப்பிலதான் இவர் இருப்பாரென்று இல்லை. எல்லா அமைப்பிலேயும் எப்படியோ நுழைந்துவிடுவார்.
கணக்காளர்களின் அமைப்பு, நிதி சம்பந்தமான அமைப்புக்கள், அரசியல் தொடர்பான அமைப்புக்கள், தொழில்நுட்பவியலாளர்களை உள்ளடங்கிய அமைப்புக்கள்.. இப்படி, இதுதான் என்றில்லை.. எல்லா அமைப்புக்களிலேயும் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டார்.
கடைசில் ‘மகளீர்’ அமைப்பிலேயும் இவர் இணைந்துகொண்டுவிட்டார் எண்டால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
கடந்த வருடம் ஐரோப்பாவில் ஒரு மதகுருவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு விழாவுக்கும் இந்த முந்திக்கொட்டை பறக்க ரெடியானபோது, அதற்கு கனடாவில் செயற்படுகின்ற ஒரு சக்திவாய்ந்த தமிழ் அமைப்பு அவருக்கு தடைபோட்டு எச்சரித்ததாம். ‘குறிப்பிட்ட அந்தக் கூட்டத்திலேயும் நீ போய் நின்று இளித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனீயெண்டா, இனி கனடாவில உனக்கு மேடை இல்லை’ எண்டு ‘ஸ்ரோங்கா. சொல்லியிருந்தினமாம்.
வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்த அந்த முந்திக்கொட்டை, நாளைக்கு கனடா டொரன்டோவில நடக்கப்போற ஒரு விழாவுக்கு வேட்டி கட்டி வெளிக்கிட்டுக்கொண்டிருக்கிறாராம் - போட்டோவுக்கு போஸ் கொடுக்க ..
(பி.கு: தம் இமேஜல கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தற்செயலாக எடுக்கப்பட்டது. செய்தில சொன்ன முந்திரிக்கொட்டை அந்தப் படத்தில இல்ல. சத்தியமா..(இனி நம்பிறதும் நம்பாததும் உங்கட பிரச்சனை)


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 12 மணி நேரம் முன்
