யாழில் ஈழத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த சிங்களக் குரலின் நினைவு தினம்
மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவரும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவருமான விக்ரமபாகு கருணாரட்னவின் (Wickramabahu Karunaratne) நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவு தினம், நேற்று (05) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், விக்ரமபாகு கருணாரட்னவின் திருவுருவப்படத்திற்கு பொது மக்களால் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமை
இதன்போது, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் பொதுத் தேர்தல் தொடர்பிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் கொள்கை தவறாது குரல் கொடுத்த விக்ரமபாகு கருணாரட்ன தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகை தொடர்பான விடயங்களும் நிகழ்வில் பேசப்பட்டுள்ளன.
இன பிரச்சனை
மேலும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் இரேனியஸ், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பான ஆதரவு தொடர்பிலும் தேசிய இன பிரச்சினை தொடர்பிலும் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக உரையாற்றினார்.

அத்துடன், நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் ரணத் குமார சிங்கவும் இதன்போது உரையாற்றியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |