தம்பலகாமத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்
திருகோணமலை - தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு இதனை ஏற்பாடு செய்திருந்தனர்
இதன்போது, தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மலர் தூவி அஞ்சலி
மேலும், அகவணக்கம் செலுத்தி கண்ணீர் மல்க மலர்தூவி மலர்மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக மாவீரர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவீரர்களின் தியாகங்களையும் நினைவுகளையும் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து நினைவு பேருரைகளும் இடம்பெற்றுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |