தமிழர் பிரதேசங்களில் தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் முன்னெடுப்பு
தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம் மற்றும்,தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு தமிழ் தூபியில்இன்று அனுஸ்டிக்கபட்டது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவு படத்திற்கு மலர்மாலை அணிவித்து,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன்,பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.
திருகோணமலை
தியாகத் தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் இன்று செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது தீபச்சுடர் ஏற்றப்பட்டு , உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் சமுக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
துயிலுமில்ல வளாகம்
தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் திகதி முதல் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில்பன்னிரெண்டு நாட்கள் உண்ணா நேன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர்கள்வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழ் கிராமங்களில் புதிய பொலிஸ் (காவல்) நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
போன்ற ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் திகதி முதல் 26 ம் திகதி வரை நீராகாரம் ஏதுமின்றி தமிழ் மக்களுக்காக உண்ணா நேன்பிருந்துதனது உயிரை நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கான சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 12 மணி நேரம் முன்