நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! எச்சரிக்கை விடுத்த விக்னேஸ்வரன்

Sri Lanka Police Tamils Mullivaikal Remembrance Day C. V. Vigneswaran
By Shadhu Shanker May 14, 2024 03:30 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் காவல்துறையினால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் (C. V. Vigneswaran) கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

கண்டன அறிக்கையில், "இரவில் ஆண் காவல்துறையினரால் அநாகரிகமான முறையில் பெண்கள் கைது செய்யப்படுகின்றார்கள். நம் நாடு எங்கே போகின்றது?

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இறந்தவர்களின் நினைவாக கஞ்சி வழங்கிய சில பெண்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக - முரட்டுத்தனமாகக் கைது செய்யப்பட்டு அவர்களது வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்: அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்: அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை

இனப் படுகொலை

இவ்வாறு கஞ்சி வழங்குவது ஆரோக்கியமற்றது என நீதிமன்றத்தில் காவல்துறையினர் உத்தரவு பெற்று, அவ்வாறு விநியோகிக்கத் தடை உத்தரவு வாங்கியுள்ளனர் எனத் தெரிகின்றது. அப்படியானால், பொதுச் சுகாதார அதிகாரி மூலம் அல்லவா அந்த உத்தரவைப் பெற்றிருக்க வேண்டும்? காவல்துறையினர் எதற்கு?

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! எச்சரிக்கை விடுத்த விக்னேஸ்வரன் | Commemorations Blocked Struggle Spirit Alert Govt

அம்பிகா சற்குணநாதன் அம்மையார் கேட்டது போல், மே தினத்தை ஒட்டியோ அல்லது வெசாக் தான தினத்திலோ காவல்துறையினர் அத்தகைய தடை உத்தரவுகளைப் பெறுவார்களா? 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியை ஒட்டிய காலத்தில் இலங்கை இனவாத அரசினால் ஒப்பேற்றப்பட்ட இனப் படுகொலையை மூடிமறைக்கும் அப்பட்டமான முயற்சியே இது.

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

தமிழரின் போராட்ட உணர்வு 

இத்தகைய தேவையற்ற, கபடத்தனமான மூடிமறைப்புச் செயல்களை இலங்கை நாடும், அதன் அரசும் எந்தளவுக்கு மேற்கொள்கின்றனவோ, அவ்வளவுக்கு அதிகமாக, இறந்தவர்களை நினைவு கூர்ந்து, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் நமது மக்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! எச்சரிக்கை விடுத்த விக்னேஸ்வரன் | Commemorations Blocked Struggle Spirit Alert Govt

கைதானவர்களுக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் பெற்று, நெருக்கடியில் இருக்கும் அந்தப் பெண்கள் உட்பட அனைவரையும் விடுவிப்பதற்கான உத்தரவை அதிபர் வழங்குவார் என்று நம்புகின்றேன். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியை எனது தமிழ்ச் சகோதரர்கள் கூடுதலான உற்சாகத்துடனும் உறுதியுடனும் நினைவுகூர்வார்கள்." - என குறிப்பிடப்பட்டுள்ளது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011