உண்மையென்றால் நிரூபியுங்கள் : சவால் விடும் ரில்வின் சில்வா
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் எந்த வகையிலும் பணத்தை அச்சிடவில்லை என ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (tilvin silva) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் அச்சிடப்பட்டால் அந்த நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கையொப்பத்தை நிதி அமைச்சர் என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க வைத்திருப்பார் (anura kumara dissanayake). எனவே அதனை காட்டுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பரப்பப்படும் பொய்
“தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கடன் வாங்குகிறது, நிறைய புதிய பணத்தைச் அச்சிடுவதாக பொய் பரப்பப்படுகிறது. நாம் சில புதிய நோட்டுக்களை வெளியிடுவதாக இருந்தால், அந்த நோட்டுகளில் மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சராக அநுர திஸாநாயக்கவும் கையொப்பமிட வேண்டும். அவர்தான் நிதியமைச்சர். அப்படிப்பட்ட குறிப்பை யாராவது கண்டுபிடித்தார்களா? உள்ள ஒருவரைக் காட்டுங்கள், பார்க்க விரும்புகிறேன். இல்லை! இது பொய். நாங்கள் பணம் அச்சிடவில்லை.
மத்தியவங்கி தான் அதைச் செய்கிறது
எங்கள் அரசு ஐந்து காசு கூட கடன் வாங்கவில்லை. மத்திய வங்கி எப்பொழுதும் அதன் தேவைகளுக்காக பெரும்பாலும் கடன் பத்திரங்கள் மற்றும் திறைசேரி பில்கள் ஊடாக பணத்தை கடன் வாங்குகிறது, இந்த மாதம் செட்டில் ஆகி விட்டால், மீண்டும் வாங்குவார்கள். அது எப்போதும் வித்தியாசமானது. அரசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நிறைவேற்றப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |