சீரற்ற காலநிலையால் இறந்தவர்களுக்கு இழப்பீடு
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்ட ஈடாக வழங்கப்படவுள்ளது.
குறித்த தகவலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (Disaster Management Centre) கல்வி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி (Pradeep Kodippili) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபா முற்பணமும் மற்றும் கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் வீட்டுச் சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலர் உணவு
இதனடிப்படையில், வீட்டின் அளவு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவதற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து, வீட்டுச் சேதத்திற்கான இழப்பீடு வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவும், வெள்ளத்தில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவும் வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்ட போதிலும் வெள்ளத்தில் குளித்தமையினால் பல உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் மற்றும் அபாயகரமான பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறாததன் பிரச்சினை இன்னும் இருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
