வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் : வெளியான முக்கிய அறிவித்தல்
Ranil Wickremesinghe
Sri Lanka
Climate Change
Money
By Shalini Balachandran
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த விடயத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Premitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பல வகையில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பணத்தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபா ஒதுக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி