யாழில் ஆலய உப தலைவர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்.(Jaffna) அச்சுவேலி, உளவிக்குளம் பகுதியில் 38 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (06) காலை அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், உளவிகுளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீதே குறித்த வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கோடரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் பலத்த காயங்களுடன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |




ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 6 மணி நேரம் முன்
