விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் இழப்பீட்டு தொகை : வெளியான தகவல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான சேத மதிப்பீடுகள் நிறைவடைந்த மாவட்டங்களில் தற்போது இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை (Agriculture and Agrarian insurance board) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாத இறுதிக்குள் அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிற மாவட்டங்களுக்கான இழப்பீடு
அத்துடன் மட்டக்களப்பு மற்றும் பிற மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் அண்மையில் தெரிவித்தார்.
கமநல சேவை நிலையங்களிலிருந்து இறுதி பரிந்துரைக்கப்பட்ட இழப்பீட்டு ஆவணங்கள் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |