ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப போட்டிப் பரீட்சை : பட்டத்தகைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
Teachers
By Jaso
இலங்கையின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்காக போட்டிப்பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைக் கோரி, 2026 பெப்ரவரி 02 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இலக்கம் 2474/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 5.1 ஆம் பிரிவின்படி, பட்டத்தகைமையைப் பூர்த்தி செய்ய வேண்டிய திகதியை 2026 மார்ச் 05 எனத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டது.
குறித்த ஆலோசனைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான ஆவணம் 2026.02.16 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி