வேதநாயகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Northern Provincial Council Sri Lanka
By Dharu Oct 30, 2026 12:39 PM GMT
Report

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராகப் பதவி வகித்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இன்று வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ்பரி ஹோட்டல் விவகாரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சரத் வீரசேகர

கிங்ஸ்பரி ஹோட்டல் விவகாரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சரத் வீரசேகர

அரச நிதி முறைகேடு

குறித்த காலப்பகுதியில் பல மில்லியன் ரூபா அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தமது முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேதநாயகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Complaint Bribery Corruption Against Vedanayagam

குறிப்பாக, 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், திருநெல்வேலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட 'பால் விநியோகத்திற்கான வலையமைப்பினை வலுவூட்டுதலும், பாலின் பெறுமதியை அதிகரித்தலும்' என்ற திட்டத்தில் ஆறு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 07.07.2020ஆம் திகதிய JF/A/QUE/KAC/VI/03/2020 என்ற இலக்கமுடைய அறிக்கையை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் க. கமலரூபன் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி மற்றும் உரிய அங்கீகாரங்கள் பெறப்படுவதற்கு முன்னரே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் கோரப்பட்ட விபரங்கள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அரசாங்கம்: தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள மாயை!

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அரசாங்கம்: தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள மாயை!

உரிய பெறுகை நடைமுறை

மேலும், உரிய பெறுகை நடைமுறைகள் பின்பற்றப்படாமல், திட்டத்தின் தேவைக்குப் பொருத்தமற்ற இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், கட்டட நிர்மாணப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே அதனுடன் தொடர்புடைய இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டதால் வீணடிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் 15 பக்கங்களைக் கொண்ட கணக்காய்வு அறிக்கையின் உண்மைப் பிரதியும் முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2016ஆம் ஆண்டு சுன்னாகம், சாவகச்சேரி மற்றும் கப்புது ஆகிய பிரதேசங்களில் மலக்கழிவு மீள்சுழற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டத்திலும் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 16.05.2020ஆம் திகதிய கணக்காய்வு அறிக்கையை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் க. அன்பழகன் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கருத்திட்ட சாத்தியக்கூற்று அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்றும், திட்டத்துடன் தொடர்புடைய ஏனைய பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளுக்கான உறுதிப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக நாகலிங்கம் வேதநாயகன் கடமையாற்றிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கணக்காய்வு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Gallery

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023