அரச ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 60 வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 63 வருடங்களாக தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அரச நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் ஓய்வு வயது 63 ஆகவும், பொறியாளர்களின் அதிகபட்ச ஓய்வு வயது 61 ஆகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையின் அங்கீகாரம்
அமைச்சரவையின் அங்கீகாரம் எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் உரிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 65 ஆக இருந்த நிலையில் அரசின் இடைக்கால பட்ஜெட் வயது வரம்பை 60 ஆக குறைத்தமை குறிப்பிடத்தக்கது.