தென்னிலங்கையில் பேருந்தில் பயணியை தாக்கிய நடத்துநர் கைது
Sri Lanka Police
Colombo
Srilanka Bus
By Sathangani
7 months ago
கொழும்பு (Colombo) - தெஹிவளை (Dehiwala) பகுதியில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரை நடத்துநர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வேகமாக பயணித்த பேருந்தை மெதுவாகச் செல்லும்படி கோரிய பயணி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பயணித்த நடத்துநரே நேற்றைய தினம் (31) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
காவல்துறையினர் கைது
இதேவேளை குறித்த நடத்துநர் பயணியிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துநரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
