சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் வெடித்தது மோதல் : தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பிற்கு அழைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரி அந்தக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva), பதில் பொதுச் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபாலவுக்கு(Dushmantha Mitrapala) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமைச்சர் குறிப்பிட்டுள்ள விடயங்களில், நீதித்துறை தணிக்கை காரணமாக கட்சியின் தலைவரால் அந்த பதவியில் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கூட்டத்தை கூட்டுமாறு அவசர கோரிக்கை
அதன் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (08) காலை 10 மணிக்கு கூட்டத்தை அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara)மற்றும் ஷான் விஜேலால்த சில்வா(Shan Wijelaaltha Silva) தவிர்ந்த ஏனைய அரசியல் பீட உறுப்பினர்களை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அக்கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிமல் சிறிபாலவின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், கட்சியின் பதில் செயலாளர் நாயகம் சார்த்தி துஷ்மந்த, அமைச்சர் .நிமல் சிறிபால சிறி பால டி சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அரசியலமைப்பை நிலைநாட்டுவதற்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளார்.
பதில் செயலாளரின் அறிவிப்பு
சுதந்திரக் கட்சிக்கு முரணாக செயற்பட முடியாது எனவும், அதற்கமைவாக கூட்டுமாறு கோரப்பட்ட கூட்டத்தை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு தமக்கு இதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால், இந்த உத்தரவில் உள்ள உண்மைகளை அறியாமல் தற்போது செயற்படுவதற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை எனவும் அமைச்சருக்கு பதில் செயலாளர் நாயகம் விடுத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பிற்கு அழைப்பு
சிறி லங்கா சுதந்திரக் கட்சி 2018 (திருத்தப்பட்ட) அரசியலமைப்பின் 16 ஆவது பிரிவின்படி செயற்படுவதற்கு அவர் சட்டரீதியாகக் கடமைப்பட்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்க சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (06) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |