ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் முரண்பாடு - ஒத்துக் கொண்டார் அமைச்சர் நாமல்
conflict
podujana peramuna
namal rajapaksha
By Sumithiran
ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் கட்சி பிரதிநிதிகளால் தீர்த்து கொள்ளப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருக்கும் இடையே எழுந்த முரண்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது கட்சியில் எழுந்துள்ள முரண்பாடுகளை நாம் சந்தியில் நின்று பேசமாட்டோம்.அவ்வாறு செய்ததில் ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன நேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆளும் கூட்டணிக்குள் நடந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்றும்,அது தொடர்பில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்