குழப்பப்படும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள்! மாக்கஸ் அடிகளார் ஆதங்கம்
அந்த ரீதியிலே நாங்கள் பார்க்கின்ற பொழுது, தங்களுடைய சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காகவும், இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு காட்டு மிராண்டித்தனமான ஒரு செயல் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறையான தீர்ப்புகள்
“ஈஸ்டர் தாக்குதல் என்பது திட்டமிட்ட முறையில் நடந்தது உலகறிந்த உண்மை. இலங்கையில் இருக்கும் எல்லோரும் அறிந்த உண்மை.

ஆகவே, அதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதனாலேயே இனங்களுக்கு இடையே ஏற்படுகின்ற அந்த இன மோதல்கள், இந்த நல்ல முறையான தீர்ப்புகளை அளித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நேரத்தில், நாங்கள் நிற்கிறோம்.
அரசாங்கம் நீதியோடு செயல்படும் என்ற நம்பிக்கையோடு அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
முரணான செயல்பாடு
இந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணைகளை குழப்புகிற நடவடிக்கை வந்து, எங்களுடைய தீவுக்கு, எங்களுடைய இலங்கை நாட்டுக்கு முரணான செயல்பாடாக அமைகிறது.
காரணம்,இலங்கை நாடு என்பது ஒரு சமய, ஆன்மீக வழியிலே வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இருப்பதனால், பௌத்த மதம் அழகான சமய, ஆன்மீக சிந்தனை களோடு மக்களை வழிநடத்துகின்ற ஒரு சமயம்.

அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தோடு இஸ்லாமிய சமயம், அத்தோடு சைவ சமயம், அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்கள் எல்லா மக்களை ஒழுக்கத்தோடு வழிநடத்துகின்ற ஒன்றுதான்.
உண்மைக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து சமயங்களும் இதற்கு, இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.
ஆனால், சமயங்களைப் பயன்படுத்தி அதற்கு தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அத்தோடு அரசியலுக்காக உண்மைகளை மறைக்கும் செயலானது, இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய பிளவுகளையும், மிகப்பெரிய பிரச்சினைகளையும், விடிவுக்கு வராத, முடிவுக்கு வராத ஒரு இனப்பிரச்சனையாக வளர்ந்து செல்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கப்போகிறது .
நாங்கள் கனா காணுகின்ற நாடு எங்களுக்கு கிடைக்குமா? நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாழ முடியுமா என்ற அந்த ஒரு சிந்தனை சிதைந்து போகும் ஒரு நிலையில் நாங்கள் இருக்கிறோம்"என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 2 மணி நேரம் முன்